Instagram Down: திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம்..!! பயனர்கள் அவதி…!
Instagram Down : மெட்டாவுக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலி அமெரிக்காவில், செயலிழந்ததாக பல பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின், கிழக்கு நேரப்படி(ET) புதன்கிழமை காலை 9:00 மணியளவில்(இந்திய நேரப்படி இரவு 7.30) மெட்டா பிளாட்ஃபார்ம்களின் ஒன்றான Instagram செயலி, ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு செயலிழந்துள்ளதாக, ஆன்லைன் செயலிழப்புகளைக் கண்காணிக்கும் வலைத்தளமான Downdetector.com தகவல் தெரிவித்துள்ளது.
பல ஆதாரங்களில் இருந்து நிலை அறிக்கைகளை தொகுத்து செயலிழப்புகளைக் கண்காணிக்கும் டவுன்டெக்டரின் கூற்றுப்படி,
ET நேரப்படி காலை 9:02 மணி நிலவரப்படி, 10,440 க்கும் மேற்பட்டோர் தளத்தில் சிக்கல்களைப் புகாரளித்த சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும் பல பயனர்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களை பயன்படுத்த முடியவில்லை என்று புகார் அளித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக META எந்தவிதமான பதிலையும் சொல்லவில்லை.
மெட்டா பிளாட்ஃபார்ம்களின் ஒன்றான இன்ஸ்டாகிராம் என்பது ஒரு சமூக ஊடக செயலியாகும். பயனர்கள் தங்கள் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றவும், அதில் அவர்களுக்கு பில்டர்ஸ் பயன்படுத்தவும் மற்றும் அந்த படங்களை Twitter மற்றும் Facebook போன்ற சமூக வலைத்தளம் உட்பட பல வழிகளில் பகிரவும் உதவுகிறது. ஐபோன், ஐபாட் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான பயன்பாடாக இன்ஸ்டாகிராம் கிடைக்கிறது. இன்ஸ்டாகிராம் என்பது பேஸ்புக்கின் ஒரு பகுதியாகும்.இந்த பிரச்சனை எப்போது தீரும் என்ற தகவலும் இதுவரை வெளியாகாததால் பயனர்கள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.