முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குற்ற வழக்கில் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு விருது கிடையாது...! பள்ளி கல்வித்துறை அதிரடி...!

06:10 AM Dec 31, 2023 IST | 1newsnationuser2
Advertisement

குற்ற வழக்கில் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது கிடையாது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்படும். இந்த விருது பெறும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும், பள்ளிக்கு ரூ.10 லட்சம் ஊக்க நிதியும் தரப்படும். இதற்காக ரூ.10.03 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், விருதுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்ய மாநில, மாவட்ட அளவில் தேர்வுக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். பரிந்துரைகளை மாநிலக் குழுவுக்கு ஜன.20-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை பரிந்துரைக்கக் கூடாது. அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 50, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 50 என 100 தலைமை ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. மாவட்ட விருது குழுவினர் பல்வேறு செயல்பாடுகளுக்கு மொத்தம் 500 மதிப்பெண்களை நிர்ணயம் செய்து, அதன் அடிப்படையில் பட்டியலை தயார் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Anna awardawardGovt staffteacherstn government
Advertisement
Next Article