முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று சம்பவம் இருக்கு..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

07:50 AM Jan 20, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று (ஜனவரி 20) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில், "தென்கிழக்கு அரபிக் கடல், அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஜனவரி 20) தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஞாயிறு முதல் வியாழன் (ஜனவரி 21-25) வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஜனவரி 20) இரவு உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும். நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 10 மி.மீ. மழை பதிவானது" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
டெல்டா மாவட்டங்கள்தென் மாவட்டங்கள்மழைவானிலை ஆய்வு மையம்
Advertisement
Next Article