'மூளையை உண்ணும் அமீபா!!' தமிழக அரசை அலர்ட் செய்யும் எடப்பாடி பழனிசாமி!!
கேரளாவில் கடந்த மாதங்களில் மூளையைத் தின்னும் அமீபா நுண்ணியிரி பரவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏரி, குளங்களில் குளித்த 3 சிறுவர்களுக்கு தலைவலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கேரளா மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மூவர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
கேரளாவில் இந்த நுண்ணுயிர் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இத்தகு பரவல்கள் ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும். அசுத்தமான நீரின் வாயிலாகவே பரவும் இந்த நுண்ணுயிர், குழந்தைகளை தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளதால், மக்களின் உயிர்களைக் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனத்தை செலுத்துமாறு இந்த திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.