நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் உறைபனி...! வானிலை மையம் எச்சரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனி நிலவ வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனி நிலவ வாய்ப்புள்ளது.
நாளை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 8-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 9-ம் தேதி ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10, 11-ம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.