For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’தேர்தலுக்கு பிறகு எங்களில் ஒருவர் திருந்த வாய்ப்பு’..!! எடப்பாடியை அட்டாக் செய்த சசிகலா..!!

06:21 PM Apr 19, 2024 IST | Chella
’தேர்தலுக்கு பிறகு எங்களில் ஒருவர் திருந்த வாய்ப்பு’     எடப்பாடியை அட்டாக் செய்த சசிகலா
Advertisement

தேர்தலுக்கு பிறகு நிச்சயம் ஒரு மாற்றம் நடக்கும் என சசிகலா பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவரும், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் எனக் கூறி வரும் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தலில் தனது ஜனநாயக கடைமையாற்றியுள்ளதாகவும், மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு எங்களில் ஒருவர் திருந்துவதற்கான வாய்ப்பு இருக்கும். அவர்கள் போட்ட தப்புக் கணக்கு அவர்களுக்கு புரியும்" என கூறினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை குறி வைத்தே சசிகலா இப்படி பேசியதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலாவே முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிமன்ற தீர்ப்பு காரணமாக அவர் சிறை செல்ல நேர்ந்தது. தொடர்ந்து அவரது ஆதரவின் பேரில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றார்.

தொடர்ந்து 4 ஆண்டுகளாக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த போதும், சிறையில் இருந்த போதும் சிறையில் இருந்து வெளிவந்த போதும் சசிகலாவை அவர் புறக்கணித்தார். மேலும், சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியதோடு சிறையை விட்டு அவர் வெளியே வந்த பிறகும் அவரை சந்திக்கவில்லை.

இந்நிலையில், ஆரம்பத்தில் இணக்கமாக இருந்த ஓபிஎஸ் தற்போது கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். மேலும், ஏற்கனவே கட்சியின் விட்டு நீக்கப்பட்ட டிடிவி தினகரன் தனி கட்சி ஆரம்பித்து தற்போது பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். தற்போது இருவருமே பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடும் நிலையில், அதிமுக தேர்தலில் பலத்த பின்னடைவை சந்திக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளிவந்தன.

இந்நிலையில் தான், சசிகலாவின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக அதிமுக தலைமையை எடப்பாடி பழனிசாமி ஏற்ற பிறகு அதற்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. உதாரணத்திற்கு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்ததோடு அதற்கு பிறகு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களுமே அதிமுக தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாகவே அதிமுக மீண்டும் தன் வசம் வரும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் திருந்த வேண்டும் என்பதற்காகவே சசிகலா இப்படி பேசி இருக்கிறார் என்கிறனர் அரசியல் நிபுணர்கள்.

Read More : வாக்களித்துவிட்டு வந்ததும் பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட நடிகர் விஜய்..!!

Advertisement