இன்னும் 2 வாரம் தான்.. வீடு தேடி வரும் ரேஷன் கார்டு.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்..!!
குடும்பத்தினருக்கு அத்தியாவசிய அடிப்படை அடையாள அட்டைகளில் ஒன்றாக ரேஷன் கார்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் பல முக்கியமான சலுகைகளை பெற ரேஷன் அட்டையே பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக மகளிர் உரிமைத்தொகை, நிவாரணத் தொகை, பொங்கல் பரிசுத்தொகுப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவுகிறது. படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 ரேஷன் அட்டைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மகளிர் உரிமைத்தொகை காரணமாக ரேஷன் கார்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் அட்டைகள் கிடைக்காமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து, புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. அதன்படி, 2024 மார்ச் மாதம் 45 ஆயிரத்து 509 குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டது.
ஆனால், லோக்சபா தேர்தல் காரணமாக மீண்டும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு ரேஷன் கார்டுகளை வழங்கும் பணிகள் தொடங்கின. ரேஷன் கடைகளில் தற்போது வரை விண்ணப்பித்த 2.80 லட்சம் பேரில் 2 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. 1.80 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
மீதம் உள்ள 1 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும். இதற்காக ஸ்மார்டு கார்டு அச்சடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. புதிய ரேஷன் கார்டுகளை வழங்க இன்னும் 2 வாரங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. நவம்பர் முதல் வாரத்திற்குள் பெரும்பாலும் விடுபட்ட நபர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு விடும் என்று தகவல்கள் வருகின்றன.
ஆனால் அவர்களும் உடனே ரேஷனில் பொருட்களை வாங்க முடியாது. அவர்களுக்கான புதிய லிஸ்ட் தயாரான பின்பே ரேஷனில் பொருட்கள் வாங்க முடியும் என்று ரேஷன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த லிஸ்ட் நவம்பர் 1 ஆம் தேதியயன இன்று தயாராகிவிடும் என்கிறார்கள்.. இந்த நிலையில் ரேஷன் கார்டில் இருந்து பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் செய்வதற்கு புதிய முறை கடைபிடிக்கப்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. புதிய நடைமுறைகள் பின்வருமாறு..
1. புதிய முறைப்படி ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்க வேண்டும் என்றால் அதற்கான ஆவணங்களை கொடுக்க வேண்டும்.
2. உதாரணமாக திருமணம் ஆகி, பெயர் நீக்கி புதிய ரேஷன் பெற.. அவர்கள் திருமண சான்றிதழ் கொடுக்க வேண்டும் .
3. இறப்பு காரணமாக பெயர் நீக்கம் செய்ய சான்றிதழ் கொடுக்க வேண்டும்.
4. தவறாக நீக்கப்பட்ட பெயர்களை மீண்டும் சேர்க்க நேரடி சோதனை செய்யப்பட வேண்டும். நேரடியாக சோதனை செய்து.. அந்த நபர் உள்ளார் என்பது என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பெயர் சேர்க்கப்படும்.
ஆனால் இந்த புதிய முறைப்படி கார்டுகளை சேர்க்கவும், நீக்கவும் மிக கடுமையான செயல்முறைகள் பின்பற்றப்படுகின்றன. மக்கள் அவ்வளவு எளிதாக இந்த முறையில் கார்டுகளை வாங்க முடியவில்லை. அதேபோல் பெயர் நீக்கமும், சேர்ப்பும் இதில் மிகவும் கடினமாக உள்ளது. இதன் காரணமாக புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்த பலருக்கு ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.