TNPSC Group 4 தேர்வர்களுக்கு ஷாக்... ரிசல்ட் எப்போது தெரியுமா..?
6,244 காலியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த மாதம் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். பொதுவாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியிடுவதற்குத் தோராயமாக 3 மாதங்களிலிருந்து 6 மாத காலமேயாகும். ஆனால் கடைசியாக 2022 ஜூலை மாதத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வானது சில காரணங்களால் தேர்வின் முடிவுகள் வெளியிடுவதற்கு 8 மாதத்திற்கு மேல் கால தாமதங்களாகிவிட்டன.
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவிற்காக 17 லட்சத்திற்கு மேலான தேர்வர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். தேர்வு முடிவு தாமதமில்லாமல் விரைவாக வெளியாக வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்பார்த்த தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் தாமதம் :
இந்த தேர்வு எழுதியவர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று சென்றுள்ளது. அதன்படி தேர்வு தாள்கள் திருத்தம் இந்த மாதம் தொடங்கி உள்ளது. ஆனால் திருத்தம் முடிய 6 மாதம் ஆகும். ஒன்றரை லட்சம் பேப்பர் என்றாலும் கூட சரியாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருத்த நேரம் எடுக்கும். இதனால் ஜனவரி 2025 தான் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முடிவுகள் வரவும் தாமதம் ஆகலாம் என்கிறார்கள். ஜனவரி ரிசல்ட் வரக்கூடிய தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்கிறார்கள்.
மதிப்பெண் விவரம் ;
6,244 காலியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ் பகுதியில் 100 கேள்விகள், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் பொதுப் பிரிவினரில் ஆண் தேர்வாளர்களுக்கான கேட் ஆப் மார்க் 146-151 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பொதுப் பிரிவில் பெண் தேர்வாளர்களுக்கான கேட் ஆப் மார்க் 152 - 155 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் (ஓபிசி) ஆண்களுக்கு 143-147, பெண்களுக்கு 146-150, பிற்படுத்தப்பட்ட பிரிவு முஸ்லீம் (பிசிஎம்) ஆண்களுக்கு 142 -145 பெண்களுக்கு 139-146 கட் ஆப் மார்க்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இப்படித்தான் வழக்கமாக மதிப்பெண் வழங்கப்படும். ஆனால் இந்த முறை கடந்த முறையை விட 2 மதிப்பெண் குறைவாக வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read more ; SSC முக்கிய அறிவிப்பு…! மொழிபெயர்ப்பாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…! முழு விவரம்