For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தேனி, விருதுநகர், தென்காசி கொட்டித்தீர்க்கப்போகும் பேய் மழை!! - அலர்ட் வானிலை மையம்

06:00 AM May 21, 2024 IST | Baskar
தேனி  விருதுநகர்  தென்காசி கொட்டித்தீர்க்கப்போகும் பேய் மழை     அலர்ட் வானிலை மையம்
Advertisement

தமிழ்நாட்டில் தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கோடை வெயிலை மக்கள் சமாளிக்கும் விதமாக அவ்வபோது மழை பெய்து வருகிறது. மாவட்டங்களில் நல்ல மழை பெய்தாலும், சென்னையில் விட்டுவிட்டுதான் மழை பெய்கிறது. இந்த மழையை மக்கள் கொண்டாடுகின்றனர். அதே நேரத்தில் தென்மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இந்த நிலையில் இன்று தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 22-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது வடகிழக்குத் திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் 24 ஆம்தேதி மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 22-ஆம்தேதி காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. இதற்கிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்தமிழக கடலோரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More: இந்தோனேஷியாவில் தடம்பதிக்கும், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை!

Advertisement