வெறும் 50 பேர் மட்டுமே வசிக்கும் உலகின் மிகச்சிறிய நகரம்..! எங்குள்ளது தெரியுமா?
இந்த உலகில் எத்தனையோ பெரிய நகரங்கள் இருக்கின்றன. ஆனால் மணி நேரத்திற்குள் முழு இடத்தையும் சுற்றிப் பார்க்கக்கூடிய ஒரு சிறிய நகரத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம். இந்த நகரத்தில் வெறும் 50 நபர்கள் மட்டுமே வசிக்கின்றனர். இந்த நகரம் தான் உலகின் மிகச்சிறிய நகரம் என்று அழைக்கப்படுகிறது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
குரோஷியாவில் உள்ள ஹம் நகரம் உலகின் மிகச்சிறிய நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஹம் நகரம் 100 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலமும் மட்டுமே கொண்டது. இது இந்தியாவில் உள்ள ஒரு தெருவை விட சிறியதாகவே இருக்கும்.
ஹம் நகரம் சிறியதாக இருந்தாலும், தனது வசீகரம் மற்றும் வரலாறு காரணமாக இந்த நகரம் பிரபலமாக உள்ளது.. குரோஷியாவின் இஸ்ட்ரியன் தீபகற்பத்தில் உள்ள இந்த சிறிய நகர்ம்11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இங்கு, பழங்கால கல் சுவர்களும், கற்களால் ஆன தெருக்களில் சில கட்டிடங்கள் இருக்கின்றன. மேலும் இந்த நகரில் ஒரு அழகான கல் மணி கோபுரம், பல நூற்றாண்டுகள் பழமையான ஓவியங்களுக்கு பெயர் பெற்ற சிறிய செயின்ட் ஜெரோம் தேவாலயம் ஆகியவை அமைந்துள்ளது.
11-ம் முதல் 14-ம் நூற்றாண்டு வரை, ஒரு இடம் அதன் அளவு பொறுத்து நகரம் என்று அழைக்கப்படவில்லை. அந்த இடத்தின் சுவர்கள், சொந்த உள்ளூர் அரசாங்கத்தை நடத்தப்பட்டால் அது நகரம் என்று கருதப்பட்டது. அந்த வகையில் ஹம் பல ஆண்டுகளாக நகரம் என்ற நிலையை பாதுகாத்து வருகிறது.
இந்த ஹம் நகரம் பெரும்பாலான கிராமங்களை விட சிறியதாக இருந்தாலும், அது ஒரு நகரமாகவே கருதப்படுகிறது. பழமையான ஸ்லாவிக் ஸ்கிரிப்டான க்ளாகோலிடிக் எழுத்துகள் பயன்படுத்தப்பட்ட முதல் இடங்களில் ஒன்றாக இந்த நகரம் கருதப்படுகிறது.
இந்த நகரத்தில் மொத்தம் ஒரு கல்லறை, இரண்டு தேவாலயங்கள், ஒரு சிறிய உணவகம் (ஹம்ஸ்கா கொனோபா என்று அழைக்கப்படுகிறது) மற்றும் சில குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளன. வெறும் 50 பேர் மட்டுமே இங்கு வசிக்கின்றனர்.
ஹம் நகரில் பிஸ்கா என்ற ஒரு வகை பிராந்தி மிகவும் பிரபலம். பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் செயல்முறை மூலம் இது தயாரிக்கப்படுகிறது. இந்த நகரில் இருக்கும் பழைய டவுன்ஹவுஸில் அமைந்துள்ள ஹம் அவுரா அருங்காட்சியகத்தில் இந்த பிராந்தி கிடைக்கும் என்று கூறப்படுகிறது..
குரேஷியாவின் புசெட் மற்றும் ரோவிஞ்ச் போன்ற நகரங்களில் இருந்து இந்த ஹம் நகருக்கு குறுகிய நேரத்தில் செல்ல முடியும். திராட்சைத் தோட்டங்கள், ஆலிவ் தோப்புகள் மற்றும் மலைகள் உருளும் மலைகள் வழியாக ஹம் நகருக்கு செல்லும் பாதை மிகவும் அழகானதாக இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு..
Read More : பேய்கள் நிறைந்த திகிலூட்டும் தீவு.. ஊரையே காலி செய்துவிட்டு சென்ற மக்கள்..!! எங்கே தெரியுமா?