அடகு கடை உரிமையாளருக்கு ஆப்பு வைத்த மாந்திரீகம்..!! தொழில் வளர்ச்சி அடைய சிறப்பு பூஜை..!! பண்ணை வீட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!
தனது தொழில் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையில் மாந்திரீகத்தை நம்பிச் சென்ற அடகு கடை உரிமையாளர் ஒருவர் ஏமாற்றப்பட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த மாந்திரீகர் என கூறிக்கொள்ளும் சிவா என்பவரை அடகு கடை உரிமையாளர் தியாகராஜன் சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். தொழில் வளர்ச்சிக்காகச் சிறப்புப் பூஜை செய்ய வேண்டும் என தியாகராஜனை நம்ப வைத்து அவரிடம் இருந்து 16 லட்சம் ரூபாயை சுருட்டி உள்ளார் சிவா. ஆனால், கொடுத்த வாக்குறுதி நிறைவேறாததால், தியாகராஜன் தனது பணத்தை திரும்பக் கேட்டுள்ளார்.
இதற்காக தியாகராஜனை சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்குச் சிவா அழைத்துள்ளார். தியாகராஜனும் தனது நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளார். அங்கிருந்த காத்திருந்த சிவா மற்றும் அவரது கூட்டாளிகள் தியாகராஜன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி ரூ.3.7 லட்சம் மற்றும் 3 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட தியாகராஜன் அளித்த புகாரின் பெயரில், குரோம்பேட்டை காவல் நிலையத்தின் தலைமைக் காவலரான குணசேகரன் உட்பட 3 பேரை போலீசார் செய்தனர். தலைமறைவாக உள்ள சிவாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Read More : வாரத்தின் முதல் நாள்..!! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?