For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Parliament Winter Session | 'ஒரே நாடு ஒரே தேர்தல் To வக்பு வாரியம்' திட்டமிடும் பாஜக.. தயாராகும் எதிர்கட்சிகள்..!! அனல் பறக்குமா விவாதம்?

The Winter Session of Parliament begins today. The opposition parties are planning to insist on discussing the Manipur violence and the Adani issue in a series of meetings
10:06 AM Nov 25, 2024 IST | Mari Thangam
parliament winter session    ஒரே நாடு ஒரே தேர்தல் to வக்பு வாரியம்  திட்டமிடும் பாஜக   தயாராகும் எதிர்கட்சிகள்     அனல் பறக்குமா விவாதம்
Advertisement

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. மணிப்பூர் வன்முறை, அதானி விவகாரம் குறித்து கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன

Advertisement

இந்தாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இன்று முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. இதில் முக்கியமாக, கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கும் வக்பு வாரிய திருத்த மசோதாவை குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அதேவேளையில், அதானி, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் குளிர்கால கூட்டத்தொடர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக்கட்சிகளின் கூட்டம் ஒன்று மத்திய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே சமயம் கூட்டத்தில் பேசிய, காங்கிரஸின் கௌரவ் கோகோய், அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் போன்ற பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Read more ; உஷார்!. தவறாக வழிகாட்டிய கூகுள் மேப்!. பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்த கார்!. 3 பேர் பலி!.

Tags :
Advertisement