For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜல்லிக்கட்டில் வெற்றி பெறுவோருக்கு சொகுசு காருக்கு பதில் டிராக்டர்..!! தமிழ்நாடு அரசுக்கு எழும் கோரிக்கை..!!

04:31 PM Jan 08, 2024 IST | 1newsnationuser6
ஜல்லிக்கட்டில் வெற்றி பெறுவோருக்கு சொகுசு காருக்கு பதில் டிராக்டர்     தமிழ்நாடு அரசுக்கு எழும் கோரிக்கை
Advertisement

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வாக்குச்சாவடி செயல் வீரர்கள் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி உபநீர் திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தும் உயிர் பலி தொடர்கிறது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்பதே தெரியவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணத்தை கொண்டும் திறக்க கூடாது. இதனால் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்.

Advertisement

ஜல்லிக்கட்டில் அரசு பரிசு அறிவிக்கிறது. காரை வைத்து விவசாயியால் என்ன
செய்ய முடியும். அதற்கு பதிலாக டிராக்டர் வாங்கிக் கொடுங்கள். விவசாயம் சார்ந்த
பரிசுப் பொருட்களை கொடுங்கள். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். ஜல்லிக்கட்டை
திட்டமிட்டு பாதுகாப்பு ஏற்பாட்டுடன் நடத்திட வேண்டும். பாலக்கோடு பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகம் உள்ளது. குளிர்பதன கிடங்கு அமைக்கவும், பதப்படுத்தவும், மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கவும் திட்டங்களை
கொண்டு வரவேண்டும்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிகாக தொழில் முதலீடுகள், தொழிற்சாலைகள் வர வேண்டும். அப்போது தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். கடந்த காலங்களில் உலக முதலீடுகள் எவ்வளவு வந்தது மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தொழில் முதலீடுகளை வரேவற்கிறோம்” என்றார்.

Tags :
Advertisement