For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வாழைத்தோப்புக்குள் காதலனுக்கு வாழ்க்கை கொடுத்த மனைவி..!! கையில் கிடைத்த ஆடையுடன் தலைத்தெறிக்க ஓட்டம்..!! கணவன் கொடுத்த பயங்கர ட்விஸ்ட்..!!

The woman was having fun drinking alcohol with her secret friend, who was waiting in the banana grove.
07:38 AM Dec 27, 2024 IST | Chella
வாழைத்தோப்புக்குள் காதலனுக்கு வாழ்க்கை கொடுத்த மனைவி     கையில் கிடைத்த ஆடையுடன் தலைத்தெறிக்க ஓட்டம்     கணவன் கொடுத்த பயங்கர ட்விஸ்ட்
Advertisement

திருப்பத்தூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 39 வயது பெண். இவரது கணவர் கட்டட வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில், 3 பேருக்கு திருமணமாகிவிட்டது. ஒரு மகள் மட்டும் மாற்றுத்திறனாளி என்பதால், பெற்றோருடன் இருந்து வருகிறார். இந்நிலையில், மனைவியின் நடத்தையில் கணவனுக்கு அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisement

தான் வேலைக்கு சென்ற பின் தனது மனைவி வேறு யாரையோ தனிமையில் சந்திப்பதாகவும் அவருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால், மனைவியை ரகசியமாக கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறார் கணவர். இதற்கிடையே, ஆசையாக வாங்கிக் கொடுத்த இரண்டரைப் பவுன் நகை மனைவியின் கழுத்தில் இல்லாததைக் கண்டும் ஆத்திரமடைந்துள்ளார்.

இந்த சந்தேகம் தொடர்பாக சமீபத்தில் மனைவியிடம் தகராறும் செய்துள்ளார். இருவருக்கும் அப்போது வாக்கு வாதம் ஏற்பட்டதையடுத்து, திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவன் மீது அந்த பெண் புகாரளித்திருந்தார். அப்போது இருவரையும் சமாதானப்படுத்தி போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். `இனிமேல் தவறுச்செய்ய மாட்டேன்' என மனைவி உத்தரவாதம் அளித்துள்ளார். இந்நிலையில், ஓசூரில் கட்டட வேலைக்காக கணவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கிருந்து மனைவிக்குப் போன் செய்யும் போதெல்லாம் அழைப்பு பிஸியாகவே இருந்ததால் கடும் கோபடைந்துள்ளார்.

மாற்றுத்திறனாளி மகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு ஏரிக்கரைப் பகுதியில் உள்ள வாழைத்தோப்புக்கு நண்பனை ரகசியமாக சந்திக்கச் செல்கிறார் என்கிற தகவல் கணவனுக்கு தெரியவந்திருக்கிறது. மனைவியை கையும் களவுமாகப் பிடிப்பதற்காக நேற்று முன்தினம் சொல்லிக்கொள்ளாமல் கிராமத்துக்குத் திரும்பியுள்ளார் கணவர். அன்றிரவு வீட்டுப் பகுதியில் மறைந்து இருந்தபடியே மனைவிக்குப் போன் செய்துள்ளார்.

மனைவியின் செல்போன் வழக்கம்போல் பிஸியாகவே இருந்துள்ளது. தொடர் அழைப்புக்குப் பிறகு போனை எடுத்த அவரின் மனைவி வழக்கம்போல் பொய்ச் சொல்லிவிட்டு `தூங்கப் போகிறேன்' எனக்கூறி விட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். பிறகு இரவு 10.30 மணியளவில் வீட்டில் இருந்து ஏரிக்கரைப் பகுதிக்கு மனைவி தனியாக சென்ற நிலையில், கணவரும் பின் தொடர்ந்து சென்றிருக்கிறார்.

அங்குள்ள வாழைத் தோப்பில் காத்திருந்த ரகசிய நண்பனுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்துள்ளார் அந்தப் பெண். இதையடுத்து, அங்கு பதுங்கியிருந்த பெண்ணின் கணவன், ஆத்திரத்தில் அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில், மனைவியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவரின் ரகசிய நண்பன் கையில் கிடைத்த ஆடையுடன் தலைத்தெறிக்க தப்பி ஓடிவிட்டான். ஆனாலும், அவர் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டார் அந்தக் கணவர்.

இதையடுத்து, அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் காயமடைந்த பெண்ணை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக திருப்பத்தூர் தாலுகா போலீஸார், பெண்ணின் கணவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000..!! வரும் 10ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

Tags :
Advertisement