For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் வானிலை மாறுதே..!! 2 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..!! மழை இல்ல..!! இது வேற..!!

Chennai and its suburbs will remain partly cloudy for the next 24 hours.
02:14 PM Sep 16, 2024 IST | Chella
தமிழ்நாட்டில் வானிலை மாறுதே     2 நாட்களுக்கு சம்பவம் இருக்கு     மழை இல்ல     இது வேற
Advertisement

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • மீனவர்களுக்கான எச்சரிக்கை :

தமிழக கடலோரப்பகுதிகளில் இன்றும், நாளையும் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 - 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : நடிகர் சித்தார்த்துக்கு டும் டும் டும்..!! மணப்பெண் யார் தெரியுமா..?

Tags :
Advertisement