முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி”..!! புதிய வழிமுறைகளை வெளியிட முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவு..!!

'The way to improve science through science,' said Chief Minister Muk. Stalin.
10:31 AM Sep 06, 2024 IST | Chella
Advertisement

”அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி” என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை - தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்.

தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும், அறிவியல் பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன்” என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Read More : ‘GOAT’ படம் பார்க்க போறீங்களா..? அப்படினா நீங்க தான் ஆடு..!! உயிரை வாங்கிட்டாங்க..!! விஜய்யை வெச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்..!!

Tags :
cm stalinகல்விமுதலமைச்சர் முக.ஸ்டாலின்
Advertisement
Next Article