For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நிலத்திற்கு அடியில் வீடு.. நிம்மதியான வாழ்க்கை வாழும் மக்கள்..!! டிவி கூட இருக்கு.. எங்கே தெரியுமா?

The villagers of Matmata, located in Tunisia, live in caves instead of houses. All the villagers are living in underground houses. Find out why here.
09:44 AM Jul 28, 2024 IST | Mari Thangam
நிலத்திற்கு அடியில் வீடு   நிம்மதியான வாழ்க்கை வாழும் மக்கள்     டிவி கூட இருக்கு   எங்கே தெரியுமா
Advertisement

துனிசியாவில் அமைந்துள்ள மாட்மதா என்ற கிராம மக்கள் வீடுகளில் வசிக்காமல் குகைகளில் வசிக்கின்றனர். கிராம மக்கள் அனைவரும் நிலத்திற்கு அடியில் வீடு அமைத்து வசித்து வருகின்றனர். இதற்கு என்ன காரணம் என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

Advertisement

ஒரு தென்னாபிரிக்க நகரமே நிலத்திற்குள் தான் இருக்கிறது என்றால், உங்களால் நம்ம முடிகிறதா..? வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அரபு மொழி பேசும் பெர்பர் இன மக்கள் வாழும் சிறிய நகரம் ஒன்று உள்ளது. அதற்கு மட்மதா என்று பெயர். தெற்கு துனிசியாவின் டிஜெபல் தஹார் பிராந்தியத்தின் வறண்ட பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள நிலப்பரப்பில் இந்த நகரம் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஸ்டார் வார்ஸ் (Star Wars) ரசிகருக்கும் லூக் ஸ்கைவால்கரின் (Luke Skywalker) வீட்டின் இருப்பிடம் பற்றி கொஞ்சம் தெரியும். அந்த இருப்பிடங்கள் எல்லாம் இந்த துனிசியாவின் மட்மதா நகரத்தில் தான் படப்பிடிப்பு செய்யப்பட்டது. ஆனால், இப்போது இந்த பாரம்பரிய கட்டமைப்புகள் கொண்ட நகரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேறுவதால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. பெர்பர் இன மக்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில்களையே செய்து வருகின்றனர். அவர்கள் அரேபியாவில் இருந்து துனிசியாவுக்கு குடிபெயர்ந்த போது மட்மதாவில் உள்ள வறண்ட நிலத்தில் வெப்பத்தில் வாழ முடியாத காரணத்தால் இங்குள்ள நிலத்தின் அடியில் மண்ணை தோண்டி வாழத் தொடங்கினர்.

எளிய கைக்கருவிகளுடன் தோண்டக்கூடிய அளவுக்கு மென்மையாக இருக்கும் மணற்கல்லில் முதலில் ஆழமான வட்டக் குழியைத் தோண்டி வீடுகள் கட்டுகின்றனர். குகையின் விளிம்புகளைச் சுற்றி தோண்டப்பட்டு, நிலத்தடி அறைகளை உருவாக்கி வீட்டின் அமைப்பை கொண்டு வருகின்றனர். இந்த தனித்துவமான ட்ரோக்ளோடைட் கட்டுமானமானது பகலில் வெப்பத்திலிருந்து தப்பிக்க உதவுகிறது. ஆனால், 1960-களில் பெய்த கனமழை, வெள்ளத்தில் நிலத்தடி குடியிருப்புகள் கொஞ்சம் சேதமடைந்துள்ளது. இருப்பினும் இன்றைய சூழலில் இந்த வீடுகள் அனைத்து நவீன வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டில் ஒவ்வொரு கொல்லைப்புறமும் ஒரு முற்றத்துடன் இணைகிறது. நிலத்தடி வீட்டிற்கு இந்த முற்றம் மிக முக்கியமானது. ஏனெனில், அது தான் இந்த வீட்டிற்கு வெளியில் இருந்து காற்றைக் கொண்டுவருகிறது. குடும்ப உறுப்பினர்கள் வேலைகளைச் செய்வதற்கும் சமூக ரீதியாக இணைவதற்கும் இது ஒரு மைய இடமாக விளங்குகிறது. மட்மதா சுரங்க வீடுகளில் இருந்து சுவரில் பாதிக்கப்பட்ட கால் வைக்க படி போன்ற அமைப்பை கொண்டு தாவி நிலப்பரப்பை அடைகின்றனர். துனிசியா ஜனாதிபதி ஹபீப் போர்குய்பா நாட்டை நவீனமயமாக்க முயன்ற போது இந்த நகரமும் அங்குள்ள பெர்பர் மக்களும் பல புதிய வசதிகளை பெற்றனர்.

Read more ; பாரிஸ் ஒலிம்பிக்!. ஒரு பதக்கம்கூட பெறாத இந்தியா!. புள்ளி பட்டியலில் கடைசி!. ரசிகர்கள் ஏமாற்றம்!

Tags :
Advertisement