For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆரம்பமே அதிரப்போகுது..!! இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை..!! எதிர்க்கட்சிகளின் பிளான் என்ன..?

The first legislative session of 2025 begins today with the Governor's address.
07:28 AM Jan 06, 2025 IST | Chella
ஆரம்பமே அதிரப்போகுது     இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை     எதிர்க்கட்சிகளின் பிளான் என்ன
Advertisement

2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

Advertisement

ஆங்கிலப் புத்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று (ஜன. 6) தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக வாசிக்கவில்லை. ஒரு சில நிமிடங்களிலேயே தனது உரையை நிறைவு செய்ததால், பெரும் சர்ச்சை வெடித்தது. நிகழாண்டும் தமிழ்நாடு அரசு தயாரித்துள்ள உரையை ஆளுநர் முழுமையாகப் படிப்பாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து இன்று பிற்பகல் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். மேலும், மறைந்த பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இரங்கல் தெரிவித்து இன்று முழுவதும் பேரவை ஒத்திவைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்தாண்டு முதல் கூட்டத்தொடரில் பல முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, ஆளும் திமுகவின் தோழமைக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்பட பல்வேறு முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Read More : அதிர்ச்சி!. சீனாவை தொடர்ந்து இந்த நாட்டில் வேகமெடுத்த HMPV வைரஸ்!. பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்!

Tags :
Advertisement