ஈரோடு இடைத்தேர்தல் வியூகம்.. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி அறிவிப்பு..!!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஈரோட்டில் தேர்தல் விதிகள் இப்போதே அமலுக்கு வந்துள்ளன. காவல்துறையினர் பாதுகாப்புகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஜனவரி 11ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிற இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், ஜனவரி 11ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Read more ; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது..!! தலைவர் விஜய் அறிவிப்பு..!!