விபத்துக்கு முன்பே தடம் புரண்ட ரயில்..? இதுதான் காரணம்..!! ஓய்வுபெற்ற மூத்த ரயில்வே அதிகாரி பரபரப்பு தகவல்..!!
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சுமார் 2,000 பயணிகளுடன் நேற்று காலை 10.30 மணிக்கு பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் தமிழ்நாட்டின் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் நேற்று இரவு 8.27 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றபோது, அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.
இதில், அந்த ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டது. மேலும், ரயிலின் பார்சல் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கிடையே, இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 5 உயரதிகாரிகளை கொண்ட குழுவை தெற்கு ரயில்வே அமைத்துள்ளது. விபத்துக்கு சிக்னல் தொழில்நுட்ப பிரச்னையா அல்லது மனித தவறா, வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க உள்ளனர்.
மேலும், ரயில்வே போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஓய்வுபெற்ற மூத்த ரயில்வே அதிகாரி, இந்த விபத்து குறித்து தனது பார்வையை முன்வைத்துள்ளார். சிக்னலிலும் பிரச்சனை இல்லை, பாயிண்ட் இண்டிகேஷனிலும் பிரச்சனை இல்லை. அதற்கு முன்பாக ஏதோ சிறு தவறு நடந்துள்ளது. சிக்னலுக்கு வருவதற்கு முன்பே ரயில் லேசாக தடம் புரண்டு இருக்கலாம். இல்லையென்றால், டிராக் ஃபெயிலியராக கூட இருக்கலாம். அதன் காரணமாகவே எக்ஸ்பிரஸ் ரயில், லூப் லைனுக்குள் நுழைந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Read More : காதலனுடன் அடிக்கடி உல்லாசம்..!! பிளஸ் 2 மாணவிக்கு கடைசியில் நடந்த சோகம்..!! அதிர்ச்சி தகவல்..!!