தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு துறையில் வேலை...! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்...!
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறையில் "System Analyst cum Data Manager" என்னும் முற்றிலும் தற்காலிக பணிக்கு இரண்டு நபர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறையில் "System Analyst cum Data Manager" என்னும் முற்றிலும் தற்காலிக பணிக்கு இரண்டு நபர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் தேவையான கல்வித் தகுதி விவரங்கள் https://foodsafety.tn.gov.in/api/media/notification_files/System_Analyst_Cum_Data_Mana ger.pdf என்னும் இணைய தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எனவே, தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்காக கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் புகைப்படத்துடன் (Passport Size) 28.11.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது ஆணையர் அலுவலகம், உணவு பாதுகாப்புத் துறை, முதல் மற்றும் இரண்டாம் தளம், பழைய மீன்வளத்துறை அலுவலக கட்டிடம், டி.எம்.எஸ் வளாகம், 359. அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-6 முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்கு பின்பு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து துறையின் முடிவே இறுதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.