For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’விஜய் கொடி ஏற்றிய நேரம் சரியில்லை’..!! ’அந்த விஷயத்தில் சந்தேகம் தான்’..!! பரபரப்பை கிளப்பிய ஜோதிடர்..!!

A famous astrologer has said that the timing of Vijay's flag hoisting is not right.
05:19 PM Aug 22, 2024 IST | Chella
’விஜய் கொடி ஏற்றிய நேரம் சரியில்லை’     ’அந்த விஷயத்தில் சந்தேகம் தான்’     பரபரப்பை கிளப்பிய ஜோதிடர்
Advertisement

சென்னையை அடுத்த பனையூர் அலுவலகத்தில் இன்று தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதுமட்டுமின்றி, அக்கட்சியின் பாடலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், பிரபல ஜோதிடர் பாலகிருஷ்ணன் ரெட்டி, "விஜய் கொடியேற்றிய நேரம் சரியில்லை என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். 9 மணியில் இருந்து 10 மணி என்று சொன்னதும், இந்த ஜோதிடர் எப்படியும் 10 மணிக்கு மேலாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தாராம்.

Advertisement

ஆனால், அவர்கள் 10 மணிக்கு உள்ளாகவே கொடியேற்றி உள்ளார்கள். அது குளிகை நேரமாம். எமகண்டம், ராகு போன்ற நேரத்திற்கு எப்படிப்பட்ட பலன் இருக்கிறதோ அதேபோல குளிகை நேரத்திற்கும் பலன் இருக்கிறது. எப்படி இந்த நேரத்தை தேர்வு செய்தார்கள் என்பது தெரியவில்லை என ஜோதிடர் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், தவெக கொடியை பார்க்கும்போது அதில் இருக்கிற சின்னமும், நிறமும் மிகப்பெரிய புகழையும் பெயரையும் பெற்று தரும்.

இன்றைய நாளை பார்க்கும்போது, வியாழக்கிழமை குருவோரம். சங்கடஹரா சதுர்த்தி. சங்கடகர சதுர்த்தி மாலையில் இருந்து தான் ஆரம்பிக்கப்படுகிறதாம். காலையில் குளிகை நேரம். அந்த நேரத்தில் தான் கொடியை விஜய் ஏற்றியிருக்கிறார். குருவோட நாளாக இன்று இருப்பதனால் குருவுக்கு உகந்த நிறமாக மஞ்சள் நிறம் இருப்பதனாலையும் செவ்வாய்க்கு உகந்த நிறமான சிவப்பு நிறம் இருப்பதனாலையும் இந்த கொடிக்கு மிகவும் விசேஷம்.

ஆனால் யானை தனது கால்களை தூக்கி நிற்பது போல இருப்பது நிலையான வளர்ச்சியை தருமா என்பது சந்தேகம்தான் என்கிறார் ஜோதிடர். கொடியை பயன்படுத்தும் போது பொதுவாக சிரச்சின்னங்களை பயன்படுத்த வேண்டும். அதனால் தான் பெயர் வைக்கும் பொழுது கூட மலர்கள் பெயரோ நதிகளின் பெயரோ வைக்க மாட்டார்கள். அது போக இன்று ஜென்ம நட்சத்திரம் ஆன பூச நட்சத்திரம் நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் சந்திராஷ்டமம். அதனால் சந்திராஷ்டம தினத்தில் புதிய வேலைகள் தொடங்குவது என்பது அவ்வளவு நல்லது இல்லை” என்று கூறி அந்த ஜோதிடர் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

Read More : ”உங்களுக்கு அவ்வளவு காம வெறி இருந்தா எங்ககிட்ட வாங்க”..!! பாலியல் தொழிலாளி பரபரப்பு பேட்டி..!!

Tags :
Advertisement