'உடலுறவு' என்ற சொல் பாலியல் வன்கொடுமை என்று அர்த்தப்படுத்த முடியாது.. -உயர்நீதிமன்றம்!.
Delhi High Court: 'உடலுறவு' என்ற சொற்றொடரை பாலியல் வன்கொடுமை என்று அர்த்தப்படுத்த முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தாயார் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான வழக்கில் குற்றவாளிக்கு போக்ஸோ சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் சார்பில் தொடரபட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற, நீதிபதிகள் பிரதிபா எம் சிங் மற்றும் அமித் ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்த சிறுமி தொடர்பான அறிக்கையில், உடலுறவு அல்லது பாலியல் வன்கொடுமை குறிப்பிடப்படவில்லை என்று கூறியது.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவருடன் பாலியல் வன்கொடுமை நடந்ததாக விசாரணை நீதிமன்றம் எவ்வாறு முடிவு செய்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறிய நீதிபதிகள், இந்த குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை அனுபவித்த நபரை, குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழ் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.
மேலும், சிறுமி 18 வயதுக்குக் குறைவானவர் என்ற உண்மை, ஊடுருவும் பாலியல் வன்கொடுமை என்று ஒரு முடிவுக்கு இட்டுச் செல்ல முடியாது. உண்மையில், சிறுமியின் அறிக்கையில், 'உடலுறவு' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார், ஆனால் அவர் எதை குறிப்பிட்டு பயன்படுத்தினார் என்பதில் தெளிவு இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது.
விசாரணை நீதிமன்ற உத்தரவில், உயர்நீதிமன்றம் கூறியது: "தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு முற்றிலும் எந்த காரணமும் இல்லை, மேலும் தண்டனைக்கான எந்த காரணத்தையும் வெளிப்படுத்தவோ அல்லது ஆதரிக்கவோ இல்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில், தீர்ப்பு ரத்து செய்யப்படும் என்று கூறிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபரை விடுவித்து தீர்ப்பளித்துள்ளது.
Readmore: ஜனவரி 1 முதல் என்னென்ன மாற்றங்கள்..? எல்ஜிபி சிலிண்டர் முதல் கார் வரை..!! விலை உயரும் அபாயம்..?