For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Weather: தமிழகத்தில் இன்று வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி அதிகமாக இருக்கும்...!

06:40 AM Mar 18, 2024 IST | 1newsnationuser2
weather  தமிழகத்தில் இன்று வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி அதிகமாக இருக்கும்
Advertisement

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20, 21 மற்றும் 22 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 23-ம் தேதி வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement