விலகும் நிலத்தட்டுகள்..!! இரண்டாக உடையும் இந்தியா..!! ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்..!!
இந்தியா நிலத்தட்டுகள் மோதியதால் உருவான நாடு என்பதால், அந்த தட்டுகள் விலகி இந்தியா இரண்டாக உடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நெதர்லாந்தின் உட்ரெக்ட் பல்கலைக்கழகத்தின் புவி இயக்கவியல் நிபுணரான ஃபேபியோ கேபிடானியோ கூறுகையில், ”டெக்டானிக் தட்டுக்கள் நகர்வதால் பூமியில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. உலகின் உயரமான மலைகளும் இதன் காரணமாக தான் உருவாகியுள்ளன. இவ்வாறு நிலத்தட்டுக்கள் நகருவதால் மலைகள் உருவாகும் நிலையில், தற்போது இருக்கும் இமைய மலையும் இதேபோன்ற நிலத்தட்டுக்கள் நகர்ந்ததால் உருவாகியுள்ளது.
இந்நிலையில், இந்த நிலத்தட்டுக்கள் நகர்ந்தால் இந்தியா இரண்டாக உடைய வாய்ப்புள்ளது. ஆய்வாளர்கள் மத்தியில் டெக்டோனிக் தட்டுகள் நகர்தல் என்ற கருத்து உள்ளது. அதன்படி, நீண்ட நாட்கள் ஒன்றாக இருக்கும் நிலத்தட்டுக்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிரிந்து சென்றுவிடும். இதுதான் இந்தியாவிலும் நடக்க உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் உருவான ஆரம்ப காலகட்டத்தில் ஒரே நிலப்பரப்பாக இருந்தது என்றும் காலப்போக்கில் துண்டு துண்டுகளாக உடைந்து பல நிலப்பரப்புகளாக மாறியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி உடைந்ததன் காரணமாக தான் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்கள் உருவானதாக கூறப்படுகிறது. நிலத்தட்டுக்கள் நகர்வது மட்டுமன்றி பூமியின் சுழற்சி, மாறிக்கொண்டே இருக்கும் வானிலை, எரிமலை வெடிப்புகள், விண்கல் தாக்குதல்கள் உள்ளிட்டவையும் நிலப்பரப்பை உடைப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.