முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இனி 146 தான்... புகார் தெரிவிக்க புதிய இலவச எண் அறிமுகம்...! தமிழக போக்குவரத்து துறை மாஸ் அறிவிப்பு...!

05:30 AM Nov 10, 2023 IST | 1newsnationuser2
Advertisement

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் அளிக்கும் உதவி மைய எண்ணை தமிழக அரசு தொடங்க உள்ளது.

Advertisement

இது குறித்து அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இயக்கம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா உதவி மைய எண் "1800 599 1500" என்ற 11 இலக்க எண் கடந்த 09.03.2023 அன்று மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு தற்போது உபயோகத்தில் இருந்து வருகிறது.

பொதுமக்கள் மற்றும் பயணிகள் இந்த 11 இலக்க உதவி மைய எண்ணை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை என்று பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், வருகின்ற "10.11.2023" முதல் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள ஏதுவாக கட்டணமில்லா மூன்று இலக்க உதவி மைய எண் (149) அறிமுகம் செய்யப்படுகிறது.

மேற்படி மூன்று இலக்க புதிய உதவி மைய எண் 149-ஐ தொடர்பு கொண்டு, பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags :
146Govt bushelpline numberTNSTC
Advertisement
Next Article