For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பேறுகால உயிரிழப்பு தடுக்க 18 பேர் கொண்ட குழு...! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு...!

The Tamil Nadu government has set up an 18-member committee headed by the secretary of the health department to prevent maternal mortality.
05:59 AM Oct 03, 2024 IST | Vignesh
பேறுகால உயிரிழப்பு தடுக்க 18 பேர் கொண்ட குழு     தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
Advertisement

பேறுகால உயிரிழப்பு தடுக்க சுகாதாரத் துறை செயலர் தலைவராக கொண்ட 18 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; தமிழகத்தில் பேறுகால உயிரிழப்பு விகிதம் ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 45.5 என்ற அளவில் உள்ளது. அதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. பிரசவத்துக்கு பிறகு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, உயர் ரத்த அழுத்தம், கிருமி தொற்று, இதய பாதிப்புகள் ஆகியவைதான் பேறுகால உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

Advertisement

இதையடுத்து, பேறுகால உயிரிழப்புகளை தடுக்க, மாநில அளவிலான செயலாக்க குழுவை அமைக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய நலவாழ்வு குழுமம் அறிவுறுத்தியது. அதன்படி, சுகாதாரத் துறை செயலர் சுப்ரியா சாஹுவை தலைவராக கொண்டு18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, அந்தந்த மாவட்டஅளவில் ஆட்சியர் தலைமையில் 10 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளது. பேறுகால உயிரிழப்புகளை கண்காணித்து, அதை தடுக்கும் நடவடிக்கைகளில் இக்குழுவினர் ஈடுபட வேண்டும்.

அனைத்து துறையினரும் ஒருங்கி ணைந்து இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் உரிய மருத்துவ கட்டமைப்புகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அடுத்த 2 ஆண்டுகளுக்குள் பேறுகால உயிரிழப்பு விகிதம் லட்சத்துக்கு 10 என குறையும் வகையில் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement