பெண் குழந்தைகளுக்கு ஹெல்தி ஸ்நாக்ஸாக என்னவெல்லாம் கொடுக்கலாம்..?
பல தாய்மார்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை குழந்தைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் கொடுப்பது என்பது தான். என்ன வேண்டுமானாலும் கொடுக்கலாம் ஆனால் ஆரோக்கியமாக கொடுக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பது உண்டு. நீங்களும் அப்படி உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரோகியமான ஸ்நாக்ஸ் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். ஆரோக்கியமான, சுவையான அதே சமயம் எளிதில் செய்ய கூடி ஸ்நாக்ஸ் என்றால் அது பணியாரம் தான். பணியாரத்தில் நெய் பனியாரம், கார பணியாரம், இனிப்பு பணியாரம், காய்கறி பணியாரம் என பல வகை உள்ளது. அந்த வகையில் உங்கள் பெண் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய கருப்பட்டி பணியாரம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
பொதுவாக பெண் குழந்தைகளுக்கு கருப்பட்டி கொடுப்பதால், அவர்களது கர்ப்பப்பைக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். அதே சமயம், உடலுக்கு வலு தரும் கருபட்டியை பெண் குழந்தைகள் மட்டும் இல்லாமல் அனைவருமே சேர்த்துக் கொள்ளலாம். இந்த பணியாரத்தை ஸ்னாக்ஸ் ஆக மட்டும் இல்லாமல் காலை உணவாகவும் சாப்பிடலாம். இந்த பணியாரத்தை நாம் மிகவும் பாரம்பரியமான முறையில் அரிசியை ஊற வைத்து, கருப்பட்டி சேர்த்து தயாரிக்க போகிறோம். அதனால் இது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இப்போது திருநெல்வேலியில் மிகவும் ஃபேமஸான கருப்பட்டி பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
முதலில் பச்சரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். 3 மணி நேரத்திற்கு பிறகு, அரிசியை நன்கு அரைத்து விடுங்கள். இப்போது அரைத்து வைத்த மாவுடன் வாழைப்பழத்தை நன்கு மசித்து சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர், துருவிய கருபட்டியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து ஆற வைத்துவிடுங்கள். நன்கு ஆறிய பின், அதை வடிகட்டி மாவுடன் சேர்த்துக் கொள்ளவும். பின்னர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலந்து விடுங்கள். இப்போது அந்த மாவை, பணியார சட்டியில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து பணியாரமாக ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுத்தால் சுவையான கருப்பட்டி பணியாரம் தயார்.
Read more ; 1917-ல் காணாமல் போன ரயில்.. இன்று வரை அறியப்படாத மர்மம்..!! 104 பயணிகளுக்கு என்ன ஆனது?