For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனரா? - தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!!

The Tamil Nadu government has filed a report in the court that various measures have been taken for the protection of women in Tamil Nadu.
06:12 PM Jun 24, 2024 IST | Mari Thangam
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனரா    தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
Advertisement

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக, தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Advertisement

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் கனிமொழி மதி, காந்திமதி, ரமாமணி, வாசுகி ஆகியோர் கூட்டாக பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர். பெண்களுக்கு எதிராக பல குற்றங்கள் நடந்து வருவதாகவும், குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்படுவதில்லை எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பாக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, “தமிழகம் முழுவதும் சுமார் 2028 பெண்கள் தங்கும் விடுதி சமூகநலதுறையால் அமைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பெண்கள் உதவிக்கு இலவச தொலைபேசி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இலவச பேருந்து வசதி, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு தனி பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

Read more ; சற்றுமுன்…! கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வு!!

Tags :
Advertisement