முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தீபாவளியை முன்னிட்டு... ரேஷன் கடைகளில் வரும் 27-ம் தேதி..! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு...!

The Tamil Nadu government has announced that all fair price shops will be open on October 27, Sunday ahead of Diwali.
06:31 AM Oct 25, 2024 IST | Vignesh
Advertisement

தீபாவளியை முன்னிட்டு வரும் அக்.27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து நியாயவிலைக் கடைகளும் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement

கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழகம் முழுவதும் செயல்படும் 24,610 முழு நேர நியாயவிலைக் கடைகள், 10,164 பகுதி நேர நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 34,774 நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடும் வகையில், அனைத்து முழுநேர மற்றும் பகுதி நேர நியாயவிலைக் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.27-ம் தேதி)முழுவதுமாக வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தீபாவளி 31.10.2024 அன்று கொண்டாடப்படுவதாலும், அன்றைய தினம் மாத இறுதி நாளாக இருப்பதாலும் அரிசி மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) அன்று செயல்படும். ஆதலால் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய பொது விநியோகத் திட்ட பொருட்களை 27.10.2024 (ஞாயிறு) அன்றும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இந்த விடுமுறை நாளில் பணியாற்றுவதற்கு ஈடாக 16.11.2024 சனிக்கிழமை அன்று பொது விநியோகத் திட்ட கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது

Tags :
DiwalirationRation opentn government
Advertisement
Next Article