மாணவர்கள் கவனத்திற்கு..!! ஜனவரியில் அரையாண்டுத் தேர்வு..!! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு..!!
வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரையாண்டுத் தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால், ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடில் பல மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. கடலோர மற்றும் வட மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. பல பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் டிசம்பர் 9ஆம் தேதிக்குள் நிலைமை சீராகாவிட்டால் ஜனவரியில் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”வெள்ளம் பாதித்த பகுதிகளில் டிசம்பர் 9ஆம் தேதிக்குள் நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கிறோம்.
அப்படி, நிலைமை சீராகவில்லை என்றால், மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் எழுத அறிவுறுத்தியுள்ளோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்வார்கள். மற்ற இடங்களில் அரையாண்டுத் தேர்வுகள் திட்டமிட்டபடி டிசம்பர் 9ஆம் தேதி முதல் நடைபெறும். மேலும், மழையால் விழுப்புரத்தில் உள்ள 45 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : தமிழ்நாட்டில் இன்று எங்கெங்கு மழை பெய்யும்..? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!