ஈஷா யோகா மையம் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை தமிழக அரசு விசாரிக்க தடையில்லை..!! - உச்ச நீதிமன்றம்
கோவை ஈஷா யோகா மையத்தின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை தமிழக அரசு விசாரிப்பதற்கு எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் பேராசிரியர் காமராஜ். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “எனது மகள்கள் லதா, கீதா ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈஷா யோகா மையத்தில், யோகா கற்கச் சென்றனர்.அதன் பின்னர், அவர்கள் அங்கயே தங்கி விட்டனர். அங்கு அவர்களை தனி அறையில் அடைத்து துன்புறுத்தல் செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால் நானும், எனது மனைவியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். நான் ஈஷாவிடம் பொது மன்னிப்பு கேட்டால்தான், எனது மகள்களுடன் பேச முடியும் என அவர்களது தரப்பில் கூறப்படுகிறது. எனது மகள்களை மீட்டுத் தர வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையம் மீது மொத்தம் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஈஷா யோகா மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
ஈஷா விகாரத்தில் பல வழக்குகள் உள்ளதால் இதனை விசாரிக்க தடை விதிக்க கூடாது என அரசு தரப்பு வாதிட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 'நிலுவை உள்ள வழக்குகள் மீதான விசாரணையை சட்டப்படி மேற்கொள்ள தடை இல்லை; இந்த வழக்கு தொடர்பான தமிழக காவல்துறையின் அறிக்கையை இன்னும் நங்கள் படிக்கவில்லை' என தெரிவித்து வழக்கு விசாரணையை அக்டோபர் 21ம் தேதி ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Read more ; இனி வாடகை வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும்..!! – வீட்டு வாடகைக்கான புதிய விதிகள் அமல்