முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’மகாராஜா’ திரைப்படத்தின் கதை என்னுடையது..!! திருட்டு பழி சுமத்திய தயாரிப்பாளர்..!! விஜய் சேதுபதி அதிர்ச்சி..!!

The story of Vijay Sethupathi starrer Maharaja has caused a stir due to the theft story.
01:49 PM Jun 27, 2024 IST | Chella
Advertisement

விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தின் கதை திருட்டு கதை என்கிற சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா திரைப்படம் அண்மையில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. இந்நிலையில், அந்த படத்தின் கதை திருட்டு கதை என்கிற சர்ச்சை கிளம்பியுள்ளது. மகாராஜா கதை தன்னுடையது என்றும் அந்த கதையை திருடி நித்திலன் சாமிநாதன் விஜய் சேதுபதியை வைத்து படமாக்கியுள்ளார் என்று தயாரிப்பாளர் மருதமுத்து குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் மருதமுத்து செய்தியாளர் சந்திப்பில் கூறிகையில், ”2020 ஆம் ஆண்டு இந்த கதை என்னிடம் வந்தது. அப்போது நித்திலன் சாமிநாதனை இதை வைத்து ஷார்ட்பிலிம் செய்து தருமாறு பணம் கொடுத்தேன் அவரும் Short Film ஒன்றை இயக்கினார். பின்னர், கே.எஸ். ரவிக்குமார், சார்லி, அப்புக்குட்டி ஆகியோரை வைத்து இந்த கதையை படமாக்கப் பதிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் ,அப்போது அத்தியாயம் 1 படத்தின் வேளைகளில் இருந்ததால் அதை செய்ய முடியவில்லை.

தற்போது இந்த படத்தை தயாரிக்கும் பணியில் இறங்கியபோது எனது நண்பர்கள் மகாராஜா படம் தான் அந்த கதை என்று கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நித்திலன் சாமிநாதன் என் கதையை திருடி படமாக்கி என்னை ஏமாற்றிவிட்டார். இது குறித்து இயக்குனர் சங்கம் தலைவர்களான பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் அவர்களிடம் முறையிட்டுள்ளேன். என்னை போன்ற சிறுபட தயாரிப்பாளர்களுக்கு நீதி கிடைக்கக் கூடாது என்பதற்காக பலர் சினிமா துறையில் சதி செய்து வருவதாகவும், தனக்கான நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Read More : புதிய தொழில் முனைவோருக்கு சூப்பர் வாய்ப்பு..!! ரூ.5 கோடி வரை கடன்..!! மானியமும் உண்டு..!!

Tags :
இயக்குநர் நித்திலன் சாமிநாதன்கதை திருட்டுகுரங்கு பொம்மைமகாராஜா திரைப்படம்விஜய் சேதுபதி
Advertisement
Next Article