For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாணவர்களே Ready -யா? பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..!!

The State Technical Education Commission, Guindy, Chennai has published the rank list of students who have applied for engineering courses. The list was released by Director of Technical Education, Veeraragavarao.
11:23 AM Jul 10, 2024 IST | Mari Thangam
மாணவர்களே ready  யா  பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
Advertisement

நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேர 1 லட்சத்து 98 ஆயிரத்து 853 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையரகத்தில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிட்டனர். பட்டியலை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் வீரராகவராவ் வெளியிட்டார். செங்கல்பட்டு மாணவி தோஷிதா முதலிடம் பிடித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நிலஞ்சனா 2-ம் இடம், நாமக்கல்லை சேர்ந்த கோகுல் மூன்றாம் இடம் பிடித்தார். பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுப் பட்டியலில் செங்கல்பட்டைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி முதலிடமும் , நெல்லையைச் சேர்ந்த நிலஞ்சனா இரண்டாம் இடமும் , நாமக்கல்லைச் சேர்ந்த கோகுல் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேலம் மாணவி ரவணி முதலிடமும் , கோவை மாணவி கிருஷ்ணா அனூப் 2ம் இடமமும் பிடித்துள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேருவோருக்கான கலந்தாய்வு முதல் 2 நாட்கள் நடைபெறும்; பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 29ம் தேதி முதல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 பேர் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்; அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் 32,223 மாணவர்கள் பொறியியல் தரவரிசையில் இடம்பிடித்துள்ளனர்.

Tags :
Advertisement