மீண்டும் எல்லை மீறிய இலங்கை கடற்படை!. 8 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு!.
Fishermens: எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது.
குறுகிய கடல் பரப்பை கொண்ட பாக் நீரிணை பகுதியினை ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். அதிலும் ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவு மட்டுமே நாட்டின் எல்லையாக உள்ள நிலையில் இந்த குறுகிய கடல்பரப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்கின்றனர். அதிலும் இயற்கை சீற்றம், பாதுகாப்பு தொடர்பான தடைகள், மீன்பிடி தடை காலம், மீன் வரத்து குறைவு போன்றவற்றால் ஆண்டிற்கு 80 நாள்கள் கூட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க முழுமையாக செல்ல முடியாத நிலை உள்ளது.
பல்வேறு இன்னல்களுக்கு இடையில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வதும், அவர்களுக்கு சிறை தண்டனை அளிப்பதுடன் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை நீதிமன்றத்தால் உத்தரவிடப்படுகிறது. இதனால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள பாக் நீரிணையை சார்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பிரச்சனைகள் நிறைந்ததாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நள்ளிரவில் வங்க கடல் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 8 மீனவர்களையும் படகுகளுடன் சிறைபிடித்துச் சென்றனர். இதையடுத்து மீனவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்திருப்பதாகவும் அவர்களை மீட்டுத் தரவேண்டும் என்றும் மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Readmore: கனடாவில் அதிகரிக்கும் பதற்றம்!. 22 வயது இந்திய மாணவர் கொலை!. ஒருவர் கைது!