முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

8 மீனவர்கள் கைது... செப்டம்பர் 5-ம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு...!

The Sri Lankan court ordered the 8 fishermen arrested by the Sri Lankan Navy to be remanded in judicial custody till September 5.
06:42 AM Aug 28, 2024 IST | Vignesh
Advertisement

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களை வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து அரசுடைமையாக்கி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கை அழித்து வருகிறது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பியதையடுத்து ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 450 விசைப்படகுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மரியசியா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடலுக்குச் சென்றகிங்சன், மெக்கன்ஸ், ராஜ் ,இன்னாசி ராஜா, சசி, மாரியப்பன், அடிமை, முனியராஜ் ஆகியோர் நேற்று அதிகாலை நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், படகையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக், மீனவர்களை வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து, மீனவர்கள் 8 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப் பட்டனர்.

Tags :
arrestFishermanIndian fishermensrilanka
Advertisement
Next Article