முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு..! அஜித்தின் மேலாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..! குஷியில் ரசிகர்கள்..!

04:34 PM Jan 29, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62-வது படமான விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்த ஆரவ் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, அபுதாபியில் கடந்த அக். 4ஆம் தேதி தொடங்கியது. இதற்காக அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றனர். படப்பிடிப்பு துவங்கி 10 நாள் கூட ஆகாத நிலையில், இஸ்ரேல் நாட்டில், போர் தொடங்கி நடந்து வந்தது. ஆனால், பாதிப்பு எதுவும் ஏற்படாத வண்ணம் படப்பிடிப்பு நடைபெற்றதாக தெரிகிறது.

இந்நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நிறைவு பெற்றுள்ளதாக மேலாளர் சுரேஷ் சந்திரா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பல மாத இடைவெளிக்கு பிறகு அஜித் இப்படத்தில் நடித்து வருகிறார். வெளிநாட்டு காட்சிகள் அதிகம் கொண்ட இப்படத்தின் ஷூட்டிங், அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில், படக்குழு அடுத்த நாட்டிற்கு நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
அஜித்சுரேஷ் சந்திராதமிழ் சினிமாரசிகர்கள்விடாமுயற்சி
Advertisement
Next Article