இனி ஆண் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு இல்லை!!! கடைக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் 43 வயதான வள்ளி (பெயர் மாற்றம்). இவர் வீட்டு வேலை செய்து வரும் நிலையில், இவரது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 18 வயதான மகளும், 13 வயதான மகனும் உள்ளனர். எட்டாம் வகுப்பு படித்து வரும் இவர்களின் மகன், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க அடிக்கடி கடைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், சம்பவத்தன்று, சிறுவன் பொருள்களை வாங்க கடைக்குச் சென்றுள்ளான். அப்போது புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர், சிறுவனை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சிறுவனும், எதற்கு அழைக்கிறார் என்று தெரியாமல் அவருடன் சென்றுள்ளான். அப்போது ஓட்டுனர், சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன், அழுதுகொண்டே வீட்டுக்கு சென்றுள்ளான். அப்போது வீட்டில் இருந்த தனது அக்காவிடம், தனக்கு நடந்த கொடுமைகளை கூறி அழுதுள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் அக்கா, சம்பவம் குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் குற்றம்சாட்டப்பட்ட நபர், மது போதையில் இருந்ததால் விசாரணை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Read more: சர்ச்க்கு சென்ற பெண்; பாசமாக பேசி பாஸ்டர் செய்த வேலை.. பெண் அளித்த பரபரப்பு புகார்..