வாட்டும் வெயில்: தலை சுற்றவைக்கும் இளநீர் விலை...!
கடுமையான வெயிலின் தாக்கத்தால் இளநீரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது ஒரு இளநீர் சராசரியாக ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பதே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது.வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட இளநீர் கடைகளை மக்கள் அதிகளவில் நாடுகின்றனர்.மேலும் பழங்கள், குளிர்பானங்களை பருகிமவருகின்றனர்.
இதனால் பழங்களின் தேவை அதிகமாகி வருகிறது. மேலும் விலையும் நாளுக்கு நாள் உயர்கிறது. அந்த வகையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய, நம் தாகத்தை தணிக்க கூடிய இளநீர், நொங்கு போன்றவற்றின் விலை அதிகரித்து வருகிறது. சென்னையில் சராசரியாக ஒரு இளநீரின் விலை ரூ. 30 வரை உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களில் ரூ.60க்கு விற்கப்பட்ட இளநீர் தற்போது ரூ. 90க்கு விற்பனையாகிறது.
ரூ. 20, 30க்கு விற்பனையான இளநீர் தற்போது ரூ. 40க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தர்பூசணி, எலுமிச்சை போன்றவற்றின் விலைகளும், பழங்களின் விலையும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
Read More: EPS: அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்…!