24 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானம்.. திடீரென கழன்ற மேற்கூரை..!! பயணிகள் உயிர் தப்பியது எப்படி?
24,000 அடி உயரத்தில் விமானத்தின் மேற்கூரையின் பெரும் பகுதி திடீரென காற்றில் பறந்த செய்தியை எப்போதாவது கேள்வி பட்டிருகீங்களா? ஏப்ரல் 28, 1988 அன்று, அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் உள்ள இரண்டு தீவுகளுக்கு இடையே ஒரு குறுகிய பயணத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் மிகவும் பயங்கரமாகவும், நம்பமுடியாததாகவும் இருந்தது. விமானத்தில் இருந்த 89 பேரின் உயிர்கள் ஆபத்தில் இருந்தன, ஆனால் விமானி மற்றும் பணியாளர்களின் துணிச்சலும் உடனடி முடிவும் இந்த விபத்தில் பல உயிர்களைக் காப்பாற்றியது.
விமானத்தின் மேற்கூரை எப்படி பறந்தது?
24,000 அடியில் விமானம் நிலையாக பறந்துகொண்டிருந்தது. திடீரென பலத்த சத்தத்தோடு விமான மேற்கூரையின் ஒரு பகுதி பெயர்ந்து காற்றில் போனது. அந்த மேற்கூரை பறந்த அடுத்த நொடி பயணிகளுக்கு பணிவிடை செய்துகொண்டிருந்த கிளாராபெல் லேன்சிங் எனும் மூத்த விமானப் பணிப்பெண்ணும் விமானத்திற்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.
அந்த நேரத்தில், விமானி ராபர்ட் ஷோர்ன்ஸ்டைமர் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தனது பொறுமையைக் கடைப்பிடித்தார். உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். மேலும், பயணிகளை அமைதிப்படுத்துவதிலும், அவர்களை பாதுகாப்பாக வைப்பதிலும் பணியாளர்கள் சிறப்ப்க் பங்காற்றினர். பயணிகளை ஆக்சிஜன் மாஸ்க் அணியுமாறும், சீட் பெல்ட்டைக் கட்டுமாறும் கேட்டுக் கொண்டார். விமானத்தின் மேற்கூரை பறந்து சென்றாலும், மீதமுள்ள விமானம் பலமாக இருந்தது. இதனால் விமானம் காற்றில் உடைந்து போகாமல் காப்பாற்றப்பட்டது மற்றும் விமானிக்கு அவசரமாக தரையிறக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த கடினமான நேரத்தில் பயணிகளும் அமைதியாக இருந்தனர் மற்றும் விமானி மற்றும் பணியாளர்களுக்கு முழுமையாக ஆதரவளித்தனர்.
சேதமடைந்த விமானம் தரையிரங்கியதும் அவசர பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர், இந்த விபத்தில் 95 பேரில்விமான பணிப்பெண் ஒருவர் உயிரிழந்தார். எட்டு பேர் பலத்த காயம் அடைந்தனர். குறிப்பிடத்தக்க வகையில், சீட் பெல்ட்களுடன் அமர்ந்திருந்த ஒவ்வொரு பயணிகளும் உயிர் பிழைத்தனர், உயிரிழந்த லான்சிங்கின் உடல் இதுவரை மீட்கப்படவில்லை. பாதுகாப்பாக திரும்பிய பயணிகள், தங்களது தலைக்கு மேல் தெரிந்த வானத்தையும் கீழ தெரிந்த பசிபிக் பெருங்கடலையும் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்ததாக தெரிவித்தனர்.
Read more ; ’இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா’..? ’அவ்வளவு ஏன் முதல்வருக்கே அது தெரியாது’..!! கடுமையாக சாடிய பிரேமலதா..!!