'நைட் ஷிஃப்ட் பணியாளர்களே உஷார்..!' - சர்க்கரை நோய் தாக்கும் அபாயம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
நீண்ட நேரம் இரவில் கண் விழித்து வேலை பார்க்கும் நபர்களுக்கு நீரிழிவு நோய் தாக்கலாம் என்றும் உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பகல் வேலை செய்பவர்களை விட இரவு வேலை செய்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சியாளர்கள், நீரிழிவு நோய் என்பது இரவு நேர ஷிப்ட்களின் விளைவாகும். இது இரத்த குளுக்கோஸ் மற்றும் புரோட்டீன் ஒழுங்குமுறையின் அடிப்படையில் சில சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
இரவு நேர வேலை செய்பவர்களிடையே நீரிழிவு அல்லது உடல் பருமன் ஏற்படும் அபாயம் குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும், நீங்கள் அதை கவனிக்காமல் விட்டுவிட்டால், அது எதிர்காலத்தில் கடுமையான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும். இரவில் வேலை செய்பவர்கள் நீரிழிவு, உடல் பருமன் மற்றும் பிற வளர்சிதை மாற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டி நடத்திய ஆய்வில் நைட் ஷிப்டில் வேலை பார்ப்பதால் நமது உடல் குளுக்கோஸ் ஒழுங்குமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தி அவை நேரடியாக புரதங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டது. வெறும் மூன்று நாட்கள் தொடர்ந்து இரவில் கண் விழித்து வேலை பார்த்தாலே உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் வளர்ச்சிதை மாற்றம் சம்பந்தப்பட்ட கோளாறையும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆராய்ச்சி குழுவானது ரத்தத்தில் உள்ள உயிரணுக்களில் உள்ள புரதங்களை ஆராய்ந்து இரவு நேரத்தில் தூங்காமல் வேலை பார்ப்பதால் ஏற்படும் மாற்றத்தை கண்காணித்துள்ளது. அதில் சில வகை புரதங்கள் பெருமளவு மாற்றத்தை வெளிபடுத்தவில்லை என்றாலும் என்றாலும், பெரும்பாலான புறங்கள் இரவு நேரத்தில் வேலை பார்ப்பதால் ஏற்படும் மாற்றத்தை வெளி கொண்டு வந்துள்ளனர். அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் வேலைபார்ப்பவர்களுக்கு குளுக்கோஸ் ஒழுங்குமுறையை கட்டுபடுத்தும் இந்த புரதங்கள் முற்றிலும் எதிரானதொரு செயல்முறைக்கு மாரி செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் இன்சுலின் உருவாக்கம் மற்றும் உணர்திறன் ஆகியவற்றில் இரவு நேரங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பல்வேறு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை தவிர நீண்ட நேரம் கண்விழித்து வேலை பார்ப்பதால் அதிக ரத்த அழுத்தம், இதய நோய் ஏற்படும் ஆபத்து, மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படலாம் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பேராசிரியர் ஹான்ஸ் வேன் டன்ஜன் கூறுகையில், நீண்ட நேரம் கண்விழித்து இரவில் வேலை பார்ப்பதால் நமது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தில் சமநிலையற்ற நிலை ஏற்படுவதோடு உடலின் அழற்சி தன்மையையும் அதிகரித்து பல்வேறு விதமான நோய்கள் தாக்க வழி செய்கிறது. நமது உடலில் உயிரியல் கடிகாரமானது, காலை மற்றும் இரவு நேரங்களில் நமது உடல் செய்ய வேண்டிய வேலைகளை பார்த்துக் கொள்கிறது.
இந்த உயிரியல் கடிகாரத்தை நாம் சரியாக கடைப்பிடிக்காத போது அவை உடலில் பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்தி மன அழுத்தத்தை உண்டாக்கி உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது என பேராசிரியர் ஹான்ஸ் வேன் டன்ஜன் குறிப்பிட்டுள்ளார்.
கூடுதலாக தொடர்ந்து மூன்று நாட்கள் இரவு நேரத்தில் கண்விழித்து பணியாற்றினாலே நமது உயிரியல் கடிகாரம் பாதிக்கப்பட்டு அதனால் நீரிழுவு நோய், உடல் பருமன் ஆகியவை ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளது என அவர் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.