முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உச்சத்தை நோக்கி வெங்காயம் விலை.. தமிழ்நாட்டில் இன்றைய காய்கறிகள் விலை இதோ..

The rise in onion prices in many cities across the country has left consumers worried.
09:57 AM Nov 10, 2024 IST | Mari Thangam
Advertisement

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகளின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் தங்காளி மற்றும் வெங்காயத்தின் திடீர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்தனர். குறிப்பாக ஒரு கிலோ தக்காளி விலையானது சில தினங்களுக்கு முன்பு 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. வெங்காயத்தின் விலையானது 70 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனையானது. இந்த விலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டன. அந்த வகையில் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கும், வெங்காயம் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

இந்தநிலையில் வெளிநாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய விதிகப்பட்ட தடை நீக்கப்பட்டதால் உள்ளூர் சந்தையில் வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் வட மாநிலங்களில் வெங்காய அறுவடை காலம் முடிந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.50ல் இருந்து தற்போது ரூ.80 ஆக உயர்ந்துள்ளது.  நான்கு நாட்களில் வெங்காயத்தின் விலை 21% அதிகரித்துள்ளது. கனமழையால் பயிர்கள் சேதம், அறுவடை தாமதம் காரணமாக இந்தியாவில் வெங்காயத்தின் விலை ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.

மற்ற காய்கறி விலை : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 400 முதல் 60 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 45 க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இஞ்சி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் 20 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

Read more ; சாதத்தை ஒரு போதும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது!! மீறினால் வரும் ஆபத்து..

Tags :
Onion pricesonsumers worried
Advertisement
Next Article