வங்கிகள் தொடர்ந்து 4 நாட்களுக்கு இயங்காது.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
அக்டோபர் 2024க்கான வங்கி விடுமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்தது. இந்த மாதம் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அக்டோபர் மாத தொடக்கம் முதலே பண்டிகை நாட்கள், விசேஷ நாட்கள், பொது விடுமுறை, உள்ளூர் விடுமுறை என நிறைய விடுமுறை நாட்கள் உள்ளன. எனவே நீங்கள் வங்கிக்கோ அரசு தொடர்பான அலுவலகங்களுக்கோ செல்வதாக இருந்தால் விடுமுறை நாட்கள் குறித்து முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது.
அக்டோபர் 2024 இல் முக்கிய வங்கி விடுமுறைகள் :
அக்டோபர் இரண்டாவது வாரத்தில் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகாசப்தமியை முன்னிட்டு அக்டோபர் 10ஆம் தேதி வியாழக் கிழமையன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நாட்டின் சில மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில நிறுவனங்களில் மகாசப்தமி அன்று விடுமுறை கிடையாது.
அக்டோபர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை அஷ்டமி மற்றும் நவமியை முன்னிட்டு நாடு முழுவதும் பொது விடுமுறை வருகிறது. துர்கா பூஜை மற்றும் தசராவை முன்னிட்டு அக்டோபர் 12ஆம் தேதி சனிக்கிழமையன்று பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் அக்டோபர் 13ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை விடுமுறை வருகிறது.
அக்டோபர் 10, அக்டோபர் 11, அக்டோபர் 12, அக்டோபர் 13 மற்றும் அக்டோபர் 14 ஆகிய தேதிகளிலும் விடுமுறைகள் இருக்கும். ஆனால் அக்டோபர் 14ஆம் தேதி, துர்கா பூஜை காரணமாக காங்டாக்கில் (சிக்கிம்) பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அக்டோபர் 14ஆம் தேதிக்குப் பிறகு, கதி பிஹு மற்றும் வால்மீகி ஜெயந்தி காரணமாக அக்டோபர் 17 ஆம் தேதி வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 20ஆம் தேதி ஞாயிறு வார விடுமுறை என்பதால் பொது விடுமுறையாக இருக்கும். தீபாவளி தொடர்பான பண்டிகைகள் காரணமாக சில மாநிலங்களில் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்படும். தீபாவளி மற்றும் நரக சதுர்தசி காரணமாக அக்டோபர் 31ஆம் தேதி வியாழக் கிழமையன்று நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
Read more ; அலர்ட்… இந்த App உங்கள் மொபைலில் இருந்தால் மொத்த பணத்திற்கும் ஆப்பு..!! உடனே டெலிட் பண்ணிடுங்க..