முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நைட் டைம்.. கல்லூரி மாணவியை மது அருந்த அழைத்த பேராசிரியர்..!! அலேக்கா தூக்கிய போலீஸ்.. என்ன ஆச்சு?

The professor who contacted the student at night in Nella Palayankota College and invited her to drink alcohol was arrested.
02:13 PM Sep 14, 2024 IST | Mari Thangam
Advertisement

நெல்லை பாளையங்கோட்டை கல்லூரியில் இரவில் மாணவியை தொடர்பு கொண்டு மது குடிக்க வரும்படி அழைத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

நெல்லை பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் புதிய தூய சவேரியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 4,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த கல்லூரி. இங்கு சமூகவியல் துறை பேராசிரியர்களாக பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ஜெபஸ்டின்(வயது 40), தூத்துக்குடியை சேர்ந்த பால்ராஜ்(40) ஆகிய இருவரும் கடந்த 4-ந்தேதி இரவில் நெல்லை மாநகர பகுதியில் ஒரு விடுதியில் மது குடித்தனர். அப்போது தனது துறையில் படிக்கும் ஒரு மாணவிக்கு போன் செய்துள்ளனர்.

மது குடிக்க வா என பால்ராஜ் அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசிக்கொண்டிருக்க, ஜெபஸ்டின் அந்த செல்போனை பிடுங்கி ஆபாசமாக பேசியதோடு நாங்கள் 2 பேரும் மது குடித்துக்கொண்டிருக்கிறோம். மது குடிக்க வா என்று கூறி அழைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். உடனே ஆத்திரம் அடைந்த பெற்றோர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 5ம் தேதி புகார் அளித்தனர்.

மேலும் இந்த சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தெரியவரவே, விசாரணை தீவிரமானது. ஜெபஸ்டினை கைது செய்தனர். இதற்கிடையில் போலீசார் வரும் தகவல் அறிந்த பேராசிரியர் பால்ராஜ் தலைமறைவானார். அவரை தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பாளையங்கோட்டை போலீசார் 2 பேராசிரியர்கள் மீதும் பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக கூறி இந்திய தண்டனை சட்டம் 74, 75, 79(5) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று அழைக்கப்படும் நெல்லை பாளையங்கோட்டையில் பிரபல தனியார் கல்லூரி பேராசிரியர்கள் மாணவியிடம் நள்ளிரவில் ஆபாசமாக பேசி மது குடிக்க அழைத்த சம்பவம் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more ; அமெரிக்க தேர்தல்.. இரண்டுமே வாழ்க்கைக்கு எதிரான கொள்கைகள்..!! யாருக்கு வாக்களிப்பது? – போப் பிரான்சிஸ் அறிவுரை

Tags :
arrestdrink alcoholNella Palayankota Collegeprofessor
Advertisement
Next Article