பாதியாக குறைந்த காய்கறிகள் விலை.. இல்லத்தரசிகள் செம குஷி..!! இன்றைய விலைப்பட்டியல் இதோ!
தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் தினமும் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. இந்தியாவில் ஒருபக்கம் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்க, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சத்தில் இருந்தது. குறிப்பாக சமையலில் தவிர்க்க முடியாத தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதாவது சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தாண்டிச் சென்றது. வெங்காயத்தின் விலை 120 ரூபாயை தாண்டிச்சென்றது. போட்டி போட்டு தக்காளி, வெங்காயம் உயர்ந்ததால் இல்லத்தரசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்
இந்த நிலையில், சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று காய்கறிகளின் விலை சரிவை சந்தித்துள்ளது. பருவமழை தொடங்கிய போது காய்கறிகளின் விலை உயர்ந்த தொடங்கிய நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலை சரிவை சந்திக்கிறது. அதன்படி சென்னையில் பூண்டு, முருங்கைக்காய் மற்றும் வெங்காயம் போன்றவைகள் விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் பூண்டு கிலோ 400 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ 280 ரூபாயாக குறைந்துள்ளது.
அதன் பிறகு ஒரு கிலோ வெங்காயம் கடந்த வாரம் 70 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 20 ரூபாயாக குறைந்துள்ளது. மேலும் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read more ; மாதவிடாய் காலத்தில் கருமுட்டை வெளிப்படுமா?. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!