அரிசி மூட்டைகளின் விலை உச்சத்திற்கு செல்லும் அபாயம்..!! 5% ஜிஎஸ்டி..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!
அரிசி மூட்டைகளுக்கும் ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால், சில்லறை விலையில் அதன் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
25 கிலோ எடைக்கும் கூடுதலாக உள்ள அரிசி மூட்டைகளுக்கும் ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 25 கிலோ மற்றும் அதற்கு கீழ் உள்ள அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு தற்போது 5 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு பெறும் வகையில், அரிசி விற்பனையாளர்கள் 26 கிலோ எடை மூட்டையில் அவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 25 கிலோவுக்கு மேல் உள்ள அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை பைகளில் அடைத்து விற்கும்போது அவற்றை விவசாய பண்ணை விளை பொருள் அல்ல என்று ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது. இதனை மத்திய மறைமுக வரிகள் வாரியம் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவு வரும் என்றால், 26 கிலோவுக்கு மேல் பைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க சூப்பர் டிப்ஸ்..!! தினமும் இதை ஃபாலோ பண்ணுங்க..!!