அதிரடியாக உயர்ந்த வெங்காயத்தின் விலை..!! இனி ஏற்றுமதிக்கு தடை..!! மத்திய அரசு முடிவு..!!
இந்தியாவில் பல மாநிலங்களில் வெங்காயம் விலை உயர்வின் காரணமாக ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக சில மாதங்களாக வெங்காயம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. வெங்காயம் விலையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், இதன் விலையானது குறைந்தபாடில்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை வெங்காயம் ஒரு கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை வித்துள்ளது. வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பிற நாடுகளிடமிருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.