For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கேப்டன் மகன் விஜயபிரபாகரன் முன்னிலை..!! கரூரில் ஜோதிமணி முன்னிலை..!!

Vijaya Prabhakaran, the candidate of AIADMK's ally, DMD, is leading in Virudhunagar.
10:01 AM Jun 04, 2024 IST | Chella
கேப்டன் மகன் விஜயபிரபாகரன் முன்னிலை     கரூரில் ஜோதிமணி முன்னிலை
Advertisement

விருதுநகரில் அதிமுக கூட்டணியான தேமுதிக-வின் வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், பாஜகவின் ராதிகா சரத்குமார் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் சந்திக்கும் முதல் தேர்தல் இது.

Advertisement

நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான எல்.முருகன், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் தங்கவேல் மற்றும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

Read More : காந்திநகர் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 : அமித் ஷா தொடர்ந்து முன்னிலை!!

Tags :
Advertisement