For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரவுடிகளுக்கு பட்ட பெயர் வைக்க கூடாது.. காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த உயர்நீதிமன்றம்..!!

The police should not be given names.. The high court warned the police..!!
05:06 PM Jan 24, 2025 IST | Mari Thangam
ரவுடிகளுக்கு பட்ட பெயர் வைக்க கூடாது   காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த உயர்நீதிமன்றம்
Advertisement

ரவுடிகளை பட்ட பெயர் வைத்து அழைப்பதே காவல்துறையினர் தான் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.

Advertisement

கடந்த 2011ம் ஆண்டு அத்வானி ரத யாத்​திரை​யின்​போது மதுரை திரு​மங்​கலம் அருகே ஆலம்​பட்டி தரைப் ​பாலத்​தில் பைப் வெடி குண்​டுகள் வைத்த வழக்கு, கடந்த 2013ம் ஆண்டு பாஜக மாநில பொதுச் செயலா​ளராக பதவி வகித்த சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்​கு​களில் கைதான போலீஸ் பக்ருதீன் கடந்த 10 ஆண்டு​களுக்​கும் மேலாக விசாரணை கைதியாக சென்னை புழல் சிறை​யில் உள்​ளார்.

இந்நிலை​யில், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அவரது தாய் செய்யது மீரா அவரை மதுரை மத்திய சிறைக்கு மாற்ற கோரி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ரவுடிகளுக்கு பாம் சரவணன், பாம்பு நாகராஜன் என எதற்கு பட்டப்பெயர்? . போலீஸ் பக்ருதீன் தொடர்பான வழக்கு விசாரணையின்போது அவருக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பாம் சரவணன், பாம்பு நாகராஜன் போன்ற பெயர்களை பார்த்தாலே அச்சமாக உள்ளது. ரவுடிகளுக்கு பட்டப்பெயர்களை வைப்பதால் சமூகத்தில் அவர்களுக்கான நற்பெயர் பாதிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Read more ; குளிர் சாதனை பெட்டியில் எந்தெந்த காய்கறிகளை எந்த இடத்தில் வைக்க வேண்டும்..?

Tags :
Advertisement