For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு..!! என்ன காரணம்..? மீண்டும் எப்போது..?

The Tamil Nadu Victory Party district secretaries' meeting has been postponed.
11:53 AM Jan 27, 2025 IST | Chella
தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு     என்ன காரணம்    மீண்டும் எப்போது
Advertisement

தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி தீவிரமாக பணியாற்றி வருகிறார். இவர், தலைமையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநில மாநாடு பெரும் வெற்றி பெற்றது. இது அரசியல் கட்சிகள் மத்தியில் புயலை கிளப்பியிருந்தது.

இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை விஜய் அறிவித்தார். இதற்கிடையே, பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராடி வரும் மக்களை விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, விஜய் ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் முதல் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இன்றும் (ஜனவரி 27) தவெக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென தற்போது அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், ஓரிரு நாட்களில் திட்டமிட்டபடி நடைபெறும் என கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Read More : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிக் கொடி கம்பங்களையும் அகற்ற உத்தரவு..!! உயர்நீதிமன்ற கிளை அதிரடி..!!

Tags :
Advertisement